புலமைப்பரிசில் மாணவர்களுக்கு இலவச கல்விக்கருத்தரங்கு

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் ஏற்பாட்டில் செலான் வங்கி மற்றும் உதயன் அனுசரணையுடன் கருத்தரங்கு இடம்பெற்றது.

சரவணபவன் அறக்கட்டளை மற்றும் புலமைச்சுடர் கையேடும் இணைந்து கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.

கருத்தரங்கில் வளவாளர்களாக பிரபல ஆசிரியர்களான வே.அன்பழகன், ப. சுசீலா ஆகியோரும், அச்சுவேலி ஆரம்பப் பாடசாலை உப அதிபர் பி.பார்த்தீபன் மற்றும் புலமைச்சுடர் கையேட்டின் தலைமை ஆசிரியர் ரி. திலீப்குமார் ஆகியோரும் கருத்துரைகளை வழங்கினர்.

இதில் வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், சங்கானை பிரதேச பாடசாலைகளிலிருந்து சுமார் 700 இக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டர்.

You might also like