சமுர்த்தியை மீள வழங்கக் கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமர்த்திப் பயனாளிகள் 800 பேரின் சமுர்த்திக் கொடுப்பனவுகள் ஒரே தடவையில் நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்து நேற்று பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பிரதேச செயலகத்துக்கு முன்பாகக் கூடிய சுமார் 300 பேர் தமக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகளை மீள வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

“போரின் பின்னர் 2010ஆம் ஆண்டு மீள்குடியமர்ந்த பின்னர் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் 2012ஆம் ஆண்டின் பின்னர் எமக்கு சமுர்த்தி உதவி வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் விவரங்கள் பெறப்பட்டு சமுர்த்தி உதவி வழங்கப்பட்டது. கடந்த வாரம் எமக்கான சமுர்த்தி உதவிகள் நிறுத்தப்பட்டன. போரால் பாதிக்கப்பட்ட எமக்கு சமுர்த்தி உதவி சிறு ஆறுதலாக இருந்த நிலையில் அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.”- என்று ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் தெரிவித்தனர்.

You might also like