அரசின் செயற்பாட்டை பொறுக்க முடியாது – வாசுதேவ

பல்வேறு காரணங்களை கூறி அரசு உள்ளூராட்சி சபைத் தேர்தலை பின்தள்ளி வருகிறது. அதைப் பொறுத்து கொள்வதற்கும் ஒரு எல்லை இருக்கின்றது.

இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கில் அலரி மாளிகையில் தலைமை அமைச்சருடனடனான சந்திப்பு நடந்தால் கூட்டு எதிர்க்கட்சி அதில் கலந்து கொள்ளவில்லை.

நீண்டகாலம் செல்லும் முன்னர் தேர்தல் செயலகம் அருங்காட்சியகமான மாறிவிடும். தேர்தல் நடத்தப்படாமல் உள்ளூராட்சி சபைகள் செயலிழந்துள்ளன. இனிவரும் காலங்களில் அரசு உணரும் வகையில் அழுத்தம் கொடுக்க எண்ணியுள்ளேன். – என்று அவர் கூறியுள்ளார்.

You might also like