தட்டுவன்கொட்டி குடி தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு

கிளிநொச்சி, தட்டுவன்கொட்டிக் கிராமத்துக்கு குடி தண்ணீர் வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டாவளைப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தட்டுவன்கொட்டிக் கிராமத்துக்கு பிரதேச சபை குடிதண்ணீர் விநியோகம் மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த 12 நாள்களாக குடி தண்ணீர் வழங்கப்படவில்லை. வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இந்த விடயத்தை இணைத் தலைவர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

அதையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

You might also like