மக்கள் தொடர்பு பிரிவு நேற்று ஆரம்பித்து வைப்பு

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தலைமை அமைச்சின் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தலைமை அமைச்சர் அலுவலக பணிக்குழுவின் பிரதித்தலைவர் ரோஸி சேனாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் அலுவலகத்தின் மூலம் மக்களின் முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படவுள்ளதோடு, முறையான முகாமைத்துவத்தின் கீழ் இது முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் தலைவராக அரச நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜே.தடல்லகே நியமிக்கப்பட்டுள்ளார்.

You might also like