கணவனை கொலை செய்த மனைவி -மறுநாள் பொலிஸாரிடம் சரண்!!

Get real time updates directly on you device, subscribe now.

மது போதையில் தகராறு செய்த கணவர் மீது, அம்மிக் கல்லை போட்டு கொலை செய்த மனைவியைப் பொலிஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியிலுள்ள ராஜன் நகரைச் சேர்ந்த திருமுருகன் தனியார் உணவு விடுதியில் பணியாற்றி வந்தார். பணிமுடிந்து நாள்தோறும் குடித்துவிட்டு வரும் திருமுருகன், மனைவி சுந்தரியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று வழக்கம் போல் குடிபோதையில் வந்த அவர், மனைவியை கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுந்தரி, கணவர் தூங்கிய பின்னர் அவரது தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்தார். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் இரவு முழுவதும் சடலத்துடன் இருந்த சுந்தரி காலையில் பொலிஸாரிடம் சரணடைந்தார்.

திருமுருகனின் உடலை கைப்பற்றிய பொலிஸார் காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of