இயக்­கச்சி காட்­டுப் பகு­தி­யில் அழிக்­கப்­ப­டு­கின்றன பனைகள்- தவி­சா­ளர் நேரில் ஆராய்வு!!

Get real time updates directly on you device, subscribe now.

கிளி­நொச்சி, இயக்­கச்­சிக் காட்­டுப்­ப­கு­தி­யில் வகை தொகை­யின்றி வெட்­டப்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்ட பனை மரங்­களை நேற்று பச்­சி­லைப்­பள்­ளிப் பிர­தேச சபைத் தவி­சா­ளர் சு. சுரேன் நேற்று நேரில் சென்று பார்­வை­யிட்­டார்.

இந்­தச் சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­கள் தொடர்­பில் உரி­ய­வர்­க­ளுக்கு அறி­வித்து அழுத்­தங்­கள் பிர­யோ­கிக்­கப்­ப­டும் என்று தவி­சா­ளர் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

கிளி­நொச்சி, இயக்­கச்­சிக் காட்­டுப்­ப­கு­தி­யில் தொடர்ச்­சி­யாக இரவு, பக­லா­கச் சட்­ட­வி­ரோ­தமா­கப் மிகப் பெரிய வள­மான பனை மரங்­கள் தறிக்­கப்­பட்­டுக் கொண்­டு­செல்­லப்­பட் டன.

வட­ம­ராட்சி கிழக்­கைச் சேர்ந்த நபர்­க­ளால் பனை­கள் தறிக்­கப்­ப­டு­கி­றது என்று அந்தப் ப­கு­தி­யி­னு­டைய பொது அமைப்­புக்­க­ளா­லும், தனி நபர்­க­ளா­லும் தொடர்ச்­சி­யாகத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது.

எந்த வித சட்ட நட­வ­டிக்­கை­யை­யும் உரிய தரப்­பி­னர் மேற்­கொள்ள முன்­வ­ர­ வில்லை. விட­யம் பச்­சி­லைப்­பள்­ளிப் பிர­தேச சபைத் தவி­சா­ளர் சு.சுரே­னுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது .

தவி­சா­ளர் உரிய நிலை­மை­களை தனது குழு­வி­ன­ரு­ட­னும், அந்தப் ப­குதி மக்­க­ளு­ட­னும் நேரில் சென்று ஆராய்ந்­தார். உரிய தரப்­பி­ன­ருக்கு அலை­பேசி ஊடாக நிலமை­களை எடுத்து விளக்­கி­னார்.

அத்­தோடு தொடர்ச்­சி­யாக இத்­த­கைய இயற்கை வள அழிப்­புக்­களை ஏற்­றுக் கொள்ள முடி­யாது என­வும். இதனை உட­ன­டி­யா­கத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு உரிய தரப்­பி­ன­ருக்கு மக்­கள் சார்­பா­கத் தான் அழுத்­தம் கொடுப்­ப­தா­க­வும் தவி­சா­ளர் சு.சுரேன் உறு­தி­ய­ளித்­தார்.

பிர­தேச சபை­யின் உப­த­வி­சா­ளர் மு.கஜன் , உறுப்­பி­னர்­கள் ரமேஷ், வீர­ப­ாகு­ தே­வர், கோகுல், மற்­றும் இயக்­கச்­சிப் பிர­தேச கமக்­கார அமைப்­பி­னர் என பல­ரும் நில­மை­களை நேரில் ஆராய்ந்­த­னர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of