காணியை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

அம்பாறை, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான களியோடை வத்தைக் காணியை குடியிருப்பதற்கு வழங்குமாறு கோரி, பொதுமக்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் சுலோபங்களை ஏந்திய வண்ணம் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

தரிசு நிலமாக பல்கலைக்கழகத்துக்கு அருகாமையிலுள்ள அரச காணியை குடியிருப்பதற்கு பகிர்ந்து தருமாறும், அங்கு தற்காலிகமாகக் குடியிருப்பவர்களை அகற்றாமல் இருப்பதற்கு ஆவண செய்யுமாறும், அந்தக்காணியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு ஒதுக்கி, மீதமாகவுள்ள காணியை குடியிருப்பதற்கு வழங்குமாறும் கோரியே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of