வட்ஸ்- அப் பாவனையாளர்களுக்கு தலையிடி!!

Get real time updates directly on you device, subscribe now.

வட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோருக்கு வீண் தொந்தரவை ஏற்படுத்தும் வகையில், செட்வொட்ச் எனும் அப் சார்ந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக இருக்கும் வட்ஸ் அப், குறுந்தகவல்கள், ஒளிப்படற்கள் , காணொளிகள் மற்றும் இதர தகவல்களைப் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது.

வட்ஸ்அப் உரையாடல்களைப் பாதுகாப்பானதாக மாற்ற பல்வேறு அம்சங்களை வட்ஸ் அப் வழங்கி வருகிறது. அண்மையில் லைஃப்ஹேக்கர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வட்ஸ் அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

செட்வொட்ச் என அழைக்கப்படும் இந்த செயலி ஒருவர் ஒன்லைனில் இருக்கும் நேரம் குறித்த தகவல்களை வழங்குகிறது. செட்வொட்ச் செயலி ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்ஸ்அப் ஒன்லைன் மற்றும் ஒஃப்லைன் ஸ்டேட்டஸ் அம்சத்தை பயன்படுத்தி மற்றவர்கள் எப்போது வட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர் என்றும் இரு தொடர்பாளர்கள் செட் செய்யும் தகவல்களைத் தெரிவிக்கும்.

நண்பர்கள், குடும்பத்தார் அல்லது ஊழியர்களின் வட்ஸ்அப் நடவடிக்கையை செட்வொட்ச் மூலம் அறிந்து கொள்ள முடியும். வட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களின் லாஸ்ட் சீன் அம்சத்தை மறைத்து வைத்திருந்தாலும் இந்த செயலி வேலை செய்யும் என செட்வொட்ச் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி உங்களுக்கு அறிமுகமானவர்களின் செட் விபரங்களை மற்றவர்களுடன் ஒப்பிடும் வசதியும் இந்த செயலியில் உள்ளதாக செட்வொட்ச் நிறுவன வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் விரும்பும் தகவல்களை வழங்க இந்த செயலி 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என தி நெக்ஸ்ட் வெப் தெரிவித்துள்ளது. அப்பிள் அப் ஸ்டோரில் இருந்து செயலி நீக்கப்பட்டு விட்டது.

செட்வொட்ச், அப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் அறியப்படவில்லை. இந்த செயலியின் வெப் வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of