வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய விசாகப் பொங்கல் உற்சவம்

Get real time updates directly on you device, subscribe now.

வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகப் பொங்கல் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் இருந்து அதிகாலை 3 மணியளவில் மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு, வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தை காலை ஐந்து மணியளவில் மடப்பண்டம் சென்றடைந்தது. காலை ஏழு மணியில் இருந்து ஆலயத்தில் பூசைகள் நடைபெற்றன.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் உற்சவத்தில் கலந்து கொண்டு நேர்த்திக் கடன்களைச் செய்தனர். நேற்று அதிகாலை தொடக்கம் பொங்கல் பொங்கி அம்மனுக்கு படைத்து வழிபடுவதில் மக்கள் ஈடுபட்னர். காவடிகள், தீச்சட்டி ஏந்தியவாறும் பல அடியார்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

வைகாசி விசாகப் பொங்கல் நாளை அதிகாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of