பதுளை மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை

நீண்ட இடைவெளியின் பின்னர் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று மதியம் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.

தற்போது நிலவிவரும் வறட்சி பதுளை மாவட்டத்தையும் பாதித்திருந்தது.
இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே இருளான காலநிலையோடு, இடியுடன் கூடிய மழை நேற்றுப் பெய்துள்ளது.

பயிர்ச் செய்கையாளர்களுக்கு மழையின் வருகை, மிகவும் பலனுள்ளதாக அமைந்துள்ளது.

எனினும் கடந்த சில மாதங்களாக குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர்.

You might also like