குடி தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக- மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!!

Get real time updates directly on you device, subscribe now.

மட்டக்களப்பு – பெரியபுல்லுமலையில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்படுகின்ற போத்தலில் அடைக்கப்படும் குடி தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை தடுக்கக் கோரியும் மட்டக்களப்பில் எதிர்ப்புப் பேரணியும், ஆர்ப்பாட்டமும் இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு கோட்டடைமுனை மெதடிஸ்த தேவாலயத்தில் இருந்து எதிர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட செயலகத்தை வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று பின்னர் மாவட்டச் செயலர் மா.உதயகுமாரிடம் புல்லுமலை பிரதேச கமநல மற்றும் பொது அமைப்புகளினால் மனுக் கையளிக்கப்பட்டது.

மாவட்டத்தின் பொது அமைப்புகள், புல்லுமலைப் பிரதேச பொது மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த எதிர்ப்புப் பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகள், கட்சி பேதமின்றிய அரசியற் பிரமுகர்கள், இளைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of