நீதி­மன்றை அவமதித்த- கைதிக்­கு சிறைத் தண்டனை!!

Get real time updates directly on you device, subscribe now.

நீதி­மன்றை அவ­ம­தித்த குற்­றத்­துக்­காக விளக்­க­ ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­வ­ருக்கு ஒரு மாத சிறை தண்­டனை விதித்­தது மன்­னார் நீதி­மன்று.

வழக்கு ஒன்­றில் 3 சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு விளக்­க­ ம­றி­யலை நீடிக்­கு­மாறு நீதி­பதி உத்­த­ர­விட்­ட­தும் ஒரு­வர் சத்­த­மிட்டு பொலி­ஸா­ரைத் திட்­டித் தீர்த்­தார். அது நீதி­மன்றை அவ­ம­தித்த குற்­ற­மாக நேற்­று­முன்­தி­னம் அறி­வித்து நீதி­மன்று சிறைத்­தண்­டனை விதித்­தது.

கடந்த ஏப்­ர­லில் மன்­னார் காட்­டாஸ்­பத்­தி­ரி­யி­லுள்ள வீடு மீது டைன­மட் எறிந்த குற்­றச்­சாட்­டில் அவர்­க­ளுக்கு எதி­ரா­கப் பேசா­லைப் பொலி­ஸார் வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­த­னர்.
சந்­தேக நபர்­கள் சார்­பாக மூன்று சட்­டத்­த­ர­னி­கள் முற்­பட்­டி­ருந்­த­னர். பிணை அனு­ம­திக்கு ஆட்­சே­பம் தெரி­விக்­கப்­பட்­ட­தால் மறி­யல் நீடிக்­கப்­பட்­டது.

இதை தாங்­கிக் கொள்ள முடி­யாத குறித்த சந்­தே­க­க­ந­பர், பொலி­ஸார் பொய்க் குற்­றச்­சாட்­டு­கள் கூறி வழக்­கு­க­ளைத் தாக்­கல் செய்­கின்­ற­னர் என்று கூண்­டி­லி­ருந்து இறங்­கிச்­செல்­லும்­போது சத்­த­மிட்­ட­வாறு சென்­றார்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of