மடு மாதா கைப்பணி அமைப்புக்கான கட்டடம் திறப்பு!!

Get real time updates directly on you device, subscribe now.

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் அமைக்கப்பட்ட மடுமாதா கைப்பணி அமைப்புக்கான கட்டடம் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் பிரதேச செயலர் என்.பரமதாஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி ஆகியோர் இணைந்து கட்டடத்தைத் திறந்து வைத்தனர்.

”இந்த வருட வரவு செலவு திட்டத்தில் எமது அமைச்சுக்கு ஆயிரத்து 750 மில்லியன் ரூபாஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டத்துக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வீதிகளை அமைப்பதற்கு பெருந்தொகையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட
56 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த காரரிடமே நிதியைக் கடனாக பெற்றுக்கொண்டு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும்” என்று அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுயதொழில் பொருள்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of