மன்னார் பிரதே சபை உறுப்பினர்களுக்கு வரவேற்பு!!

Get real time updates directly on you device, subscribe now.

மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்களை  வரவேற்கும் நிகழ்வு மன்னார் பிரதேச சபையில், மன்னார் பிரதேச சபையின் செயலாளர் திருமதி டி.எம்.வி.லோகு தலைமையில் இன்று இடம் பெற்றது.

இதன் போது மன்னார் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 21 உறுப்பினர்களும் வரவேற்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சி,ஈ.பி.டி.பி,தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியகட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்கள்  கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் மற்றும் சிறிலங்கா முஸ்ஸீம் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் , உறுப்பினர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 2 பேர் உட்பட 11 உறுப்பினர்கள் குறித்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை  எனத் தெரிவிக்கப்பட்டது.

 

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of