வெடித்துச் சிதறியது எரிமலை- 25 பேர் உயிரிழப்பு- 300 பேர் காயம்!!

Get real time updates directly on you device, subscribe now.

குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்ததில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 300 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குவாட்டமாலாவின் தலைநகரான குவாட்டமாலா சிட்டிக்கு தென்-மேற்கு திசையில் 40 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இந்த எரிமலையே இவ்வாறு வெடிப்புக்குள்ளாகியுள்ளது.

குறித்த வெடிப்பினால் வெளியாகிய லாவா குழம்பு அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை சூழ்ந்து நகர்ந்ததில் அங்கிருந்த வீடுகளும், அதிலிருந்தவர்களும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எரிமலை தொடர்ந்து கக்கி வரும் சாம்பலின் காரணமாக குவாட்டமாலா நகரத்திலுள்ள வானூர்தி நிலையம் மூடப்பட்டுள்ளது. தேசிய அளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of