வலித்தூண்டல் புனித அன்னம்மாளின் வருடாந்த திருவிழா திருப்பலி

இளவாலை – வலித்தூண்டல் புனித அன்னம்மாளின் வருடாந்தத் திருவிழாத் திருப்பலி இன்று காலை நடைபெற்றது.

வடமாகாணத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆலயங்களில் வலித்தூண்டல் புனித அன்னம்மாள் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயம் சுமார் 150 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமை வாய்ந்த வரலாற்றைக் கொண்டது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தின் இறுதி ஞாயிறு தினத்தில் திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுவது வழமை.

இந்த வருடத்தின் திருவிழாத் திருப்பலி இன்று காலை அருட்தந்தை பெனட் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. பங்குத்தந்தையான அருட்தந்தை பிராயன் அடிகளாரும் திருப்பலியில் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. வலித்தூண்டல் பங்குமக்களும், மாரிசன்கூடல், சேந்தான்குளம், இளவாலை உள்ளிட்ட அயல் கிராம மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் இருந்தும் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர். போரால் சேதமடைந்திருந்த இந்த ஆலயம் தற்போது ஓரளவு திருத்தியமமைக்கப்பட்டுள்ளது.

You might also like