தாயிடம் பேசும் 4 மாதக் குழந்தை – மைசூரில் ஆச்சரியம்!!

நான்கு மாதக் குழந்தை ஒன்று தனது தாயிடம் பேசுகின்றது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூர் மாவட்டம் ராமபுரா பகுதியைச் சேர்ந்தவர்கள் நந்தீஷ்- ரம்யா தம்பதிகள். அவர்களின் 4 மாதக் குழந்தையே தாயுடன் பேசுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அந்தக் குழந்தையிடம், யாராவது தாய் ரம்யா வேண்டுமா? எனக் கேட்டால் வேண்டும் என பதில் அளிக்கிறது.

அதேபோல் தாயின் குரலுக்கும் குழந்தை பதில் தருகிறதாம். குழந்தையிடம் தாய் ஏதாவது பேசினால் அதற்கும் பதில் தருகிறது.

இந்தக் குழந்தையைப் பார்ப்பதற்கும் குழந்தையின் பேச்சைக் கேட்பதற்கும் தினமும் மக்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளனர்.

தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகள் 5 மாதங்கள் இருக்கும் போதே தாயின் குரலை கேட்டுப் பழகி விடுகிறது.

இதனால் பிறந்த 10 முதல் 11 மாதங்களில் நன்றாகப் பேச ஆரம்பித்து விடுகிறது. இந்த குழந்தை பிறந்து நான்கு மாதங்களில் தாயிடம் பேசுவது அதிசயமாகவுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனராம்.

You might also like