தென்பகுதிக்குச் சென்று திரும்பிய 68 பேருக்கு டெங்­கு நோய்த் தொற்று

தென்மராட்சி சுகாதாரப் பிரிவு தகவல்

தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத் தைச் சேர்ந்த 68 பேர் கடந்த மாதம் டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­கள் அனை­வ­ரும் தென்­ப­குதிக்குச் சென்று திரும் பியவர்கள் என்று சுகா­தாரத் திணைக் கள புள்ளி விவரங்­கள் தெரி விக்­கின்­றன. இந்த எண்­ணிக்கை கடந்த ஜூன் மாதத் து­டன் ஒப்­பி­டு­கை­யில் மூன்று மடங்கு அதி­க­ரித்­துள்­ள­தெ­ன­வும் அதில் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

‘கடந்த ஜூன் மாதம் தென் மராட்சியைச் சேர்ந்த 26 பேர் டெங்கு நோய்த் தொற் றால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். இவர்­க­ளில் 80 வீத­மா­னோர் தென் பகு­திக்குக் கட்­ட­டப் பணி­க­ளுக்­கா­கச் சென்று வந்­த­வர்­கள். ஏனைய 20 வீத­மா­னோர் தென் பகு­திக்கு பல்­வேறு தேவை­க­ளுக்­கா­கச் சென்ற சுற்­று­லாப் பய­ணி­கள், பல்­க­லைக்­க­ழ­க மாண­வர்­க­ளா­வர்.

தென் பகு­திக்­குச் சென்­ற­வர்­கள் டெங்கு நோய்த் தொற்றி லிருந்து தம்­மைப் பாது­காக்க பாது­காப்­பான மூடிய உடை­களை அணிந்து கொள்­ள­வேண்­டும். காலை, மாலை வேளை­க­ளில் நுளம்பு கடிக்­கும் ஆபத்து உள்­ள­தால் அந்­த­நே­ரங்­க­ளில் நுளம்பு விரட்டி மருந்­து­களை உட­லில் தட­விக் கொள்­ளவேண்டும்.

இரண்டு நாள்­க­ளுக்கு மேலா­கக் காய்ச்­சல் காணப் ப­டின் மருத்­துவமனை­யில் அல்­லது தனி­யார் ஆய்வு நிலை­யங்­க­ளில் குரு­திப் பரி­சோ­தனை மேற்­கொண்டு டெங்­கு நோய்த் தொற்றுத்­ தொடர்­பாக உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­ள வேண்டும்.

டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்­கப்­பட்­டு குண­மா­கிய பின்­னர் குறைந்­தது இரண்டு வாரங்­கள் பூரண ஓய்­வில் இருக்கவேண்டும்’ என சாவ­கச்சேரி­ ம­ருத்­து­வனை நிர்­வா­கம் தெரிவித்­தது.

You might also like