அரசியல் தீர்வே முள்ளிவாய்க்காலுக்குப் பிராயச்சித்தமாகும்!! – பல்கலை ஆசிரியர் சங்கம்!

Get real time updates directly on you device, subscribe now.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமான பதிவாகும். நீண்ட வரலாற்று உரிமைக்கான போராட்டத்தில் எச்சங்களையும், வலிகளையும் சுமந்து உயிர்த் தியாகம் செய்த ஓர் புனிதமான பிரதேசம் முள்ளிவாய்க்கால். நிரந்தர காத்திரமான அரசியல் தீர்வே முள்ளிவாய்க்கால் அவலத்துக்கான பிராயச்சித்தமாகும்.

இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தச் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் உள்ளதாவது-

வரலாற்றின் பதிவுகள் ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தின் விதைகளாகும். தமிழர்களின் இலட்சியத்தை அடைவதற்கான ஒரு குறியீடாகவும், ஒரு மையமாகவும் “முள்ளிவாய்க்கால் மே 18”ஐ நினைவு கூருதல் வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

பன்னாடுகளால் பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தாமல் கால இழுத்தடிப்புச் செய்யவது கண்டனத்துக்குரியது. மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களை நியாயபூர்வமாக பன்னாட்டு விசாரணைப் பொறிமுறைகள் மூலம் கண்டறியப்பட வேண்டும்.

மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தலைத் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் வேண்டிக் கொள்கின்றது.- என்றுள்ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of