சுவை தரும் முட்டைகோஸ் சட்னி

Get real time updates directly on you device, subscribe now.

தேவையானவை

முட்டைகோஸ் – கால் கிலோ
காய்ந்த மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப)
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – 3
சின்ன வெங்காயம் – 10
உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை

 

சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். சட்டியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி உளுத்தம்பருப்பை சேர்க்கவும்.

அது பொன்னிறம் ஆகும் சமயம் நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், காய்ந்த மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும்.

முட்டைகோஸ் பச்சை வாசனை போனதும், புளி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் (புளிக்கு பதில் தக்காளி விரும்புபவர்கள் இச்சமயத் தில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்).

பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விட்டு, மிக்ஸியில் அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இதனுடன் சேர்த்துக் கலக்கவும்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of