சோனம் கபூருக்கு இன்று திருமணம்!!

Get real time updates directly on you device, subscribe now.

பொலிவூட் நடிகை சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை இன்று திருமணம் செய்து கொண்டார். மும்பையில் உள்ள அவரது ஆன்ட்டியின் பங்களாவில் திருமணம் நடைபெற்றது.

சோனம் கபூர் சிவப்பு நிற உடையில் மிகவும் அழகாக இருந்தார். பங்களாவில் அமைக்கப்பட்டிருந்த மேடையை பார்த்து அனைவரும் வியந்தனர். அந்த மேடைக்கான ரோஜா பூக்கள் ஹாலந்து மற்றும் ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பட்டதாம்.

சோனம், ஆனந்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் உள்ள தி லீலா ஹோட்டலில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு பிரபலங்கள் பலரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோனம், ஆனந்தின் திருமணம் சீக்கிய முறைப்படி நடந்தது. பங்களா வளாகத்தில் உள்ள கோவிலில் வைத்து அவர்கள் மாலையை மாற்றிக் கொண்டனர்.

பெரியம்மா ஸ்ரீதேவி இறந்ததால் தனது திருமணத்தை எளிமையாக நடத்துமாறு சோனம் கபூர் தனது தந்தை அனில் கபூரிடம் தெரிவித்திருந்தார். இந்த எளிமையை பார்த்தே பலரும் வியந்துவிட்டனர். இதற்கு பெயர் தான் எளிமையான திருமணமா?

திருமண விழாவில் கலந்து கொள்ள டுபாய் சென்ற இடத்தில் ஸ்ரீதேவி உயிர் இழந்தார். அவரது இறப்புக்குப் பின்னர் கபூர் குடும்பத்தில் நடந்துள்ள முதல் திருமணம் இது. திருமண விழாவில் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி மிகவும் அழகான உடையில் கலந்து கொண்டனர்.

You might also like

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of