தனியார் வைத்தியசாலைகளில் – அறவிடப்படும் வற் வரி நீக்கம்!!

Get real time updates directly on you device, subscribe now.

தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் 15 வீத வற் வரி (Vat tax), இன்று முதல் நீக்கப்படவுள்ளது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான அனுமதியை அமைச்சரவை அண்மையில் வழங்கியது.

இதன் பிரகாரம், தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திர சிகிச்சைகளுக்கான கட்டணம், வைத்திய செலவு மற்றும் வௌிநோயாளர் பிரிவுகளுக்கான கட்டணங்களுக்கான வரி நீக்கப்படவுள்ளது.

வற் வரி திருத்தச் சட்டம், விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகளில், 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 15 வீத வற் வரி அறவிடப்படுகின்றது.

இதேவேளை, சிறுவர்களுக்கான வங்கிக் கணக்குகளின் வட்டி மீது அறவிடப்பட்ட 2.5 வீத வரியும் இன்று முதல் நீக்கப்படவுள்ளது.

இதன் பிரகாரம் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சேமிப்புக் கணக்கின் மீது அறவிடப்பட்ட வரி நீக்கப்படவுள்ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of