தூத்துக்குடி விவகாரம்- கமல்- ரஜினி மோதல்!!

Get real time updates directly on you device, subscribe now.

“தூத்துக்குடியில் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதி என்றால், நானும் சமூக விரோதி தான்” என்று ரஜினிக்குப் பதிலடி கொடுத்துள்ளார் கமல்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கச்சென்ற நடிகர் ரஜினிகாந்த், போராட்டம் குறித்தும், போராட்டத்தில் வன்முறையாளர்கள் விஷக் கிருமிகள்
ஊடுருவி விட்டார்கள் என்றும், சும்மா சும்மா போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்றும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வன்முறையாளர்கள் ஊடுருவிட்டனர் என்ற ரஜினியின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படிப் பார்த்தால் நானும் வன்முறையாளன் தான். அது அவர் கருத்து, என் கருத்து வேறு.

நான் காந்தியின் சீடன். போராட்டம் என்பது கத்தியும், வாளையும், துப்பாக்கியை கொண்டு நடத்துவது அல்ல. துப்பாக்கியே வந்தாலும் அதைத் திறந்த மார்புடன் எதிர்கொள்ளும் தன்மையை நாம் தூத்துக்குடியில் பார்த்தோம். அதை நான் நல்லதொரு பாதையாகப் பார்க்கிறேன். அதில் வன்முறை இருந்தது என்றால் அதை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். போராட்டத்தை நிறுத்தக்கூடாது” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of