பூண்டின் மருத்துவம்!!

Get real time updates directly on you device, subscribe now.

சமையலில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.

அதிலும் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் உண்டு.பூண்டைப் பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது.பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆக செயல்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

பூண்டு சாப்பிடுவதால் வயிற்றுப் பிரச்சினைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் அதிகரிப்பது குறைந்து, இதய நோய் வருவது தடுக்கப்படும்.

நிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகளைப் போக்கும் சக்தியும் பூண்டுக்கு உள்ளது.

பூண்டைப் பச்சையாக சாப்பிட முடியாதவர்கள் அதை சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது மருந்துக் கடைகளில் கிடைக்கும் பூண்டு மாத்திரைகளை (garlic pills) உட்கொள்ளலாம்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of