மணப்பெண் அலங்காரத்தில்- கவனிக்க வேண்டியவை!!

Get real time updates directly on you device, subscribe now.

* எந்த இடத்தில் திருமணம் நடக்கிறதோ அந்த இடத்துக்கு தக்கபடி அலங்கார விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிக மேக்கப் செய்து கொண்டு கோவிலில் எளிமையாக திருமணம் செய்வது முரண்பாடாக அமையும்.

* நீங்கள் எல்லா நாள்களிலும் எப்படி சிகை அலங்காரம் செய்கிறீர்களோ அதே மாதிரியான அலங்காரத்தைதான் திருமணத்தின்போதும் பின்பற்ற வேண்டும். வழக்கத்துக்கு மாறாக சிகை அலங்காரம் செய்தால் அது ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும்.

* சிலருக்கு கூந்தலை விதவிதமான வடிவங்களில் அலங்கரித்தால் பார்க்க அழகாக இருக்கும். சிலருக்கு சாதாரணமாக சிகை அலங்காரம் செய்தாலே அருமையாக அமைந்துவிடும். எது பொருத்தமாக இருக்குமோ அதனையே பின்பற்றலாம்.

* திருமணத்திற்கு முன்பாக கட்டாயம் மேக்அப் ஒத்திகை பார்க்க வேண்டும். ஒரு தடவையாவது எந்த மாதிரியான மேக்கப் செய்வது நன்றாக இருக்கும் என்று பரிசோதித்து பார்த்தால்தான் உங்களுக்கும், அழகுக்கலை நிபுணருக்கும் நம்பிக்கையும், திருப்தியும் ஏற்படும்.

* மேக்அப் ஒத்திகை செய்யும்போது திருமணத்திற்கு உடுத்தப்போகும் புடவை, அணியும் ஆபரணம் போன்றவற்றை உடன் எடுத்து செல்லவேண்டும். அது மேக்கப்பை முழுமைப்படுத்தும். நிறை, குறைகளை சரி செய்ய உதவியாக இருக்கும். ஜீன்ஸ், டாப் போன்ற மேற்கத்திய ஆடைகளை அணிந்து கொண்டு மேக்கப் ஒத்திகைக்கு சென்றால் பலன் தராது.

* சிலருக்கு தங்கள் முகத்தில் எந்த உறுப்பு அழகாக இருக்கிறது என்பது தெரியாது. உதடுதான் அழகாக இருப்பதாக நினைப்பார்கள். ஆனால் கண்கள்தான் வசீகரிக்கும் அழகை கொண்டிருக்கும். முகத்தில் எந்த உறுப்பு அழகாக இருக்கிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுதான் ஒப்பனைக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

* மணப்பெண் அலங்காரம் பெரும்பாலும் காலை வேளையில்தான் அதிகமாக நடக்கிறது. அவசர, அவசரமாக கிளம்பி சென்று சீக்கிரமாக மேக்கப்பை முடித்துவிடுமாறு நிறைய பேர் சொல்கிறார்கள். ஒருவேளை மேக்கப் சரி இல்லை என்றால் அதனை மாற்ற நேரம் இல்லாமல் போய் விடும். அதனால் மேக்கப் செய்ய அழகுக்கலை நிபுணருக்கு போதுமான நேரம் கொடுங்கள்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of