மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு

மக்கள் வங்கி வவுனியா கிளையின் ஏற்பாட்டில் வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்றுக் காலை 8.30 தொடக்கம் மதியம் ஒரு மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.

மக்கள் வங்கியின் வன்னி பிராந்திய முகாமையாளர் சிவா சிவக்கொழுந்துவின் தலமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வவுனியா மக்கள் வங்கி முகாமையாளர் கு.கோடிஸ்வரன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர், மாணவர்கள் , மக்கள் வங்கி பிராந்திய மற்றும் வவுனியா கிளை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஜி.ஜங்கரன், கே.ஆர். கமலநாதன் ஆகியோரால் விரிவுரைகள் நடத்தப்பட்டன. கருத்தரங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனா்.

You might also like