இராணுவ வசமுள்ள காணிகள் உடன் விடுவிக்கப்படவேண்டும்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோரிக்கை

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தில் இரா­ணு­வத்­தின் வச­முள்ள காணி­கள் உட­ன­டி­யாக விடு­விக்­கப்­பட வேண்­டும். அங்கு மக்­கள் மீளக்­கு­டி­ய­மர்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டும். இவ்­வாறு கிழக்கு மாகாண உறுப்­பி­னர் ஞான­முத்து கிருஷ்­ண­ பிள்ளை வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

பாலை­ய­டி­வ­ட்டைப் பகு­தி­யின் நெல்­லிக்­காடு முன்­பள்ளி சிறார்­க­ளின் உடல் திறன் விளை­யாட்டு விழா நேற்று நடை­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவா் இத­னைத் தெரி­வித்­தாா். அவா் தெரி­வித்­த­தா­வது,

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க வடக்­குக் கிழக்­கில் படை­யி­னர் வச­முள்ள காணி­கள் கூட்­ட­ர­சி­னால் ஆங்­காங்கே விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆனால் பாலை­ய­டி­வட்­டைப் பொதுச் சந்­தைக்­கு­ரிய காணி­களை இது­வ­ரை­யில் இரா­ணு­வத்­தி­னர் விடு­விக்­க­வில்லை.

இந்­தப் பிர­தே­சத்­தின் மண்­டூ­ரில் மக்­கள் குடி­யி­ருப்­புக்களில் சுமார் 30 வரு­ட­கா­ல­மாக பொலி­ஸார் நிலை கொண்­டி­ருந்­த­னர். அண்­மை­யில் அதனை விடு­வித்த­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கடந்த காலைத்தை விட தற்­போது ஓர­ளவு அபி­வி­ருத்­தி­க­ளை­யும் மேற்­கொண்டு வரு­கின்­றது. – என்­றார்

You might also like