மனித எலும்புக்கூடு அகழ்வு – காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி நேரில் அவதானிப்பு!!

Get real time updates directly on you device, subscribe now.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 6 ஆவது நாளாக முன்னெடுக்கப்படு வருகின்ற நிலையில்,மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணியை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி மிராக் ரஹீம் மற்றும்,குறித்த அலுவலகத்தின் சட்டத்தரணி வருன திசேரம் ஆகிய இருவரும் நேரடியாகச் சென்று அவதானித்துள்ளனர்.

-மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று 6 ஆவது நாளாக குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது சிறப்பு சட்ட மருத்துவ நிபுனர் டபில்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர்,களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறஞ்சன், திருமதி ரணித்தா ஞானராஜ் , தடவியல் நிபுனத்துவ பொலிஸார் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்,சட்டத்தரணிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி மிராக் ரஹீம் மற்றும்,குறித்த அலுவலகத்தின் சட்டத்தரணி வருன திசேரம் ஆகிய இருவரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இடம் பெற்று வரும் மனித எலும்புக்கூடு அகழ்வுகளை நேரடியாக அவதானித்ததோடு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளாரும் வருகை தந்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி மிராக் ரஹீம் மற்றும்,குறித்த அலுவலகத்தின் சட்டத்தரணி வருன திசேரம் ஆகிய இருவரும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்டு அகழ்வுகள் இடம் பெற்று வரும் மண் குவியல்களையும்,அங்கு இடம் பெற்று வருகின்ற அகழ்வுகளையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of