மிளகு தரும் மருத்துவம்

Get real time updates directly on you device, subscribe now.

சூரணம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும், ஜீரண பிரச்சனைகளுக்கு கடுகு நல்ல மருந்தாக அமைகிறது.

கல்சியம், இரும்பு, பொஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற விட்டமின்களும் மிளகில் உள்ளன.

மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது.

மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் கொண்டது.

உணவைச் செரிக்க வைப்பது. உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது. சாதாரண காய்ச்சலுக்கு மிளகு கசாயம் நல்ல மருந்தாக அமையும். சளி இருமல் இருந்தால் மிளகு கசாயத்தோடு பனைச் சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.

தினசரி மிளகு பொடி 1/2 கிராம் வெதுவெதுப்பான நீரில் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரைப் பெருக்கி உணவை செரிக்க உதவும்.

மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து, 1 கிராம் இருவேளை வெந்நீரில் எடுத்துவர செரியாமை நீங்கி, வயிற்று நோய்கள் நீங்கும்.

ஜலதோஷத்தால் வந்த இருமல் நீங்க மிளகுக் கஷாயத்தில் பனை சர்க்கரை சேர்த்துக் குடித்து வர வேண்டும். உடல் சூட்டினால் வரும் இருமல் தீரும்.

தலையில் புழுவெட்டினால் முடி இல்லாமல் இருக்கும் அதனைச் சரிசெய்ய, அந்த இடத்தில் மிளகை அரைத்துப் பூசிவர முடி முளைக்கும்.

தினமும் பல் தேய்க்கும்போது மிளகுடன் உப்பு சேர்த்து தேய்த்து வந்தால் பல் கூச்சம், பல்வலி, வாய்த் துர்நாற்றம் நீங்கி பல் வெண்மையாகும்.

வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும். மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்யும். மிளகுப் பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்துவர ஞாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் நீங்கும்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of