கார் உற்பத்தியாளர்கள் அமெ. முதலீடு

ஜப்பானின் மாபெரும் கார் உற்பத்தியாளர்களான டொயோட்டா மற்றும் மஸ்டா ஆகியன இணைந்து அமெரிக்காவில் முதலீடு செய்யவுள்ளன.

அமெரிக்காவில் புதிய கார் தொழிற்சாலையொன்றை நிறுவும் குறித்த இரு நிறுவனங்களும் இணைந்து சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அமெரிக்க தொழிற்சாலையினூடாக ஆண்டுக்கு சுமார் 3 இலட்சம் கார்களை தயாரிக்க எதிர்பார்த்துள்ள அதேவேளை, 4 ஆயிரம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது அமெரிக்க உற்பத்தியின் மீதான பெரிய முதலீடாகும் என அமெரிக்க அரசதலைவர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டொயோட்டா நிறுவனமானது மஸ்டா நிறுவனத்தின் 5 வீத பங்குகளை கொள்வனது செய்யவுள்ள அதேவேளை, மஸ்டா நிறுவனமும் டொயோட்டா நிறுவனத்தில் முதலீடு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தவற விடாதீர்கள்:  இன்றைய வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதம்!

You might also like