சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத் திருவிழா

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத் திருவிழா நேற்றுக் காலை மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

சாவகச்சேரி – கச்சாய் வீதியில் அமைந்துள்ள புனித லிகோரியார் ஆலயத் திருவிழாத் திருப்பலி நேற்றுக் காலை 7.00 மணியளவில் யாழ் மாவட்டக் குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தலைமையில், அருட்தந்தையர்களான ஸ் ரீபன், வினோதன் மற்றும் பங்குத்தந்தை றெக்ஸ் சௌந்தரா, இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இலங்கையிலே ஒரே ஒரு ஆலயமாக சாவகச்சேரியில் அமையப்பெற்றிருக்கும் இவ் ஆலயம் சுமார் 160 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமை வாய்ந்த வரலாற்றைக் கொண்டது.

ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு தினத்தில் திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுவது வழமை.

சாவகச்சேரி பங்குமக்கள், தென்மராட்சிப் பகுதிப் பங்கு மக்கள் உள்ளிட்ட வெளி மாவட்ட மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

திருப்பலியைத் தொடர்ந்து புனிதரின் திருச்சொரூபப் பவனி இடம்பெற்று ஆசிர்வாதமும் இடம்பெற்றது.

You might also like