நெல் உலர்த்த விரைவில் 3 மேடைகள்

யாழ். குடா­நாட்­டில் நெல் உலர்த்­து­வ­தற்கு 3 இடங்­க­ளில் மேடை­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. தொல்­பு­ரம், தனங்­கி­ளப்பு, கர­வெட்டி ஆகிய இடங்­க­ளி­லேயே அவை அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

ஒவ்­வொரு மேடை­யும் தலா 5 லட்­சம் ரூபா நிதி­யில் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது என்று விவ­சா­யத் திணைக்­க­ளம் தெரி­வித்­தது.

கடந்த காலங்­க­ளில் குடா­நாட்­டில் நெற்­க­திர்­களை உல­ர­வைக்­கும் மேடை வச­தி­கள் இல்­லா­த­தி­னால் விவ­சா­யி­கள் சிர­மங்­களை எதிர்­கொண்­ட­னர். அறு­வடை காலத்­தில் வீதி­க­ளி­லேயே அவர்­கள் நெல் உலர வைத்தனர்.

You might also like