அதிமுகவின் பிளவு நிரந்தரமாகி விடுமா?

அதி­முக அணி­களை இணைக்­கும் முடி­வில் இருந்து ஓபி­எஸ் பின்­வாங்­கி­விட்­டார். இனி இணைப்­புக்கு வேலை இல்லை என அவ­ருக்கு மிக நெருக்­க­மா­ன­வர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

ஜெய­ல­லிதா உயிரிழப்புக் குறித்து சிபிஐ விசா­ர­ணைக்கு பரிந்­து­ரைக்க வேண்­டும், சசி­கலா குடும்­பத்­தி­னரை அதி­மு­க­வில் இருந்து அடி­யோடு விலக்கி வைக்க வேண்­டும் என்ற 2 நிபந்­த­னை­க­ளை­தான் அதி­முக அணி­கள் இணைப்­புக்கு முக்கி யமாக முன் வைத்தார் ஓ.பன்­னீ ர் செல்­வம். இதற்கு உறுதியான பதிலை எடப்­பாடி பழ­னி­சாமி அணி இது­வரை அளிக்­க­வில்லை.

மாறாக, ‘ஜெய­ல­லிதா உயிரிழப்புக் குறித்த வழக்கு நீதி­மன்ற விசார ணையில் இருப்­ப­தால் இப்போ தைக்கு அது தொடர்­பாக எது­வும் செய்ய முடி­யாது’ என அமைச்­சர் திண்­டுக்­கல் சீனி­வா­சன் உள்­ளிட்ட வர்­கள் பேசி வரு­கின்­ற­னர்.

ஒரு­பக்­கம் ஓபி­எஸ் அணி­யு­டன் இணக்­க­மாக போவ­தாக காட்­டிக் கொண்டே இன்­னொரு பக்­கம், ‘நாங்­களே அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அதி­முக’ என்­பதை தேர்­தல் ஆணை­யத்­தில் நிலை­நி­றுத்­த­வும் சசி­கலா, தின­க­ரன் உள்­ளிட்ட வர்­களை கட்­சிக்­குள் தக்­க­வைப் பதற்­கான வேலை­க­ளை­யும் மறை­மு­க­மா­கச் செய்து வரு­கி­றது எடப்­பாடி அணி. அத­னால்­தான், ‘இனி அணி­கள் இணைப்பு சாத்­தி­ய­மில்லை. தமி­ழக சட்­டப் பேர­வைக்கு விரை­வில் தேர்­தல் வரும்’ என்று கொழுத்­திப் போட்­டி­ருக்­கி­றார் ஓபி­எஸ்.

தவற விடாதீர்கள்:  இன­வாத நிலைப்­பாடு நாட்­டுக்கு நன்மை தரப் போவ­தில்லை

இது­கு­றித்து ஓபி­எஸ்­ஸுக்கு நெருக்­க­மான சிலர் ‘தி இந்­து’­வி­டம் கூறி­ய­தா­வது:
சசி­கலா தரப்­புக்கு எதி­ராக போர்க்­கொடி தூக்­கி­ய­ தால்­தான் கட்­சி­யின் அடி­மட்ட தொண்­டர் களி­டம் ஓபி­எஸ்­ஸுக்கு செல்­வாக்கு பெரு­கி­யது.

இந்­நி­லை­யில், சசி­கலா தரப்­பின் பினா­மி­யாக செயல்­ப­டும் எடப்­பாடி அணி­யோடு இணைவ தற்கு ஓபி­எஸ் எடுத்த முடிவை தொண்­டர்­கள் ரசிக்­க­வில்லை. ‘அவர்­க­ளுக்கு காரி­யம் ஆக­வேண் டும் என்­ப­தற்­காக காலை பிடிக்­கி­றார்­கள். இதை நம்­பிப் போனால் சசி­கலா தரப்பு உங்­களை முக­வரி இல்­லா­மல் செய்­து­வி­டும்’ என்று போகு­மி­ட­மெல்­லாம் தொண்­டர்­கள் ஓபி­எஸ்­ஸி­டம் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

திஹா­ருக்கு போன எல்­எல்­ஏக்­கள்

இதை­யெல்­லாம் உணர்ந்­து­தான் இணைப்பு முயற்­சி­யில் இருந்து ஓபி­எஸ் பின்­வாங்­கி­விட்­டார். தின­க­ரனை கட்­சி­யில் இருந்து ஒதுக்­கி­விட்­ட­தாக சொல்­கின் றனர்.

ஆனால், அதி­முக எம்­எல்­ஏக் களான வெற்­றி­வேல், தங்­க­த­மிழ் செல்­வன் உள்­ளிட்­ட­வர்­கள் திஹார் சிறைக்கே சென்று அவரை சந்­திக்­கி­றார்­கள். மது­ரை­யில் முதல்வர் கலந்­து­கொண்ட விழாவை புறக்­க­ணித்­து­விட்டு டெல்­லிக்கு போயி­ருக்­கி­றார் தங்­க­த­மிழ் செல்­வன்.

தின­க­ரன் கைதா­னதை கண்­டித்து கர்­நா­டக மாநி­லச் செய­லா­ளர் புக­ழேந்தி மது­ரை­யில் ஆர்ப்­பாட்­டம் நடத்­து­கி­றார். தின­க­ரனை ஒதுக்கி வைத்­தது உண்­மை­யாக இருந்­தால் இவர்­கள் மீதெல்­லாம் கட்சி நட வடிக்கை எடுத்­தி­ருக்க வேண்­டும். ஆனால், அப்­ப­டிச் செய்ய வில்லை.

தவற விடாதீர்கள்:  குடாநாட்டு மக்களை அரசு பாதுகாப்பது எப்போது?

இப்­படி நாட­க­மா­டு­ப­வர்­க­ளு­டன் மீண்­டும் இணைந்­தால் ஓபி­எஸ்­ஸின் செல்­வாக்கு சரிந்­து­வி­டும். பேச்சுக்கள் Âïïஇழுத்­துக் கொண்டே, எடப்­பாடி அர­சு­டன் புதுடில்லி அரசு இணக்­க­மாக இருப்­ப­து­போல ஒரு தோற்­றத்தை ஏற்­ப­டுத்தி தொண்­டர்­களை திசை திருப்ப முயற்­சிக்­கின்­ற­னர். ஆனால், எதார்த்­தம் அப்­படி இல்லை.

நிதி ஆயோக் கூட்­டத்­துக்­காக டெல்லி சென்­றி­ருந்த முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, தலைமை அமைச்சர் மோடி யைச் சந்­திக்க முயற்­சித்­தார்.
ஆனால், பாஜக முதல்­வர்­களை எல்­லாம் சந்­தித்த மோடி, எடப்­பா­டியை சந்­திக்­கா­மல் தவிர்த்­து­விட்­டார். அதே­நே­ரத்­தில், அதி­முக எம்.பி. ஒரு­வ­ரின் மகன் திரு­மண நிகழ்­வில் கலந்­து­கொள்­வ­தற்­காக தூத்­துக்­குடி சென்­றி­ருந்த ஓபி­எஸ்­ஸு­டன் புதுடில்லி அமைச்­சர் பொன்.ராதா­கி­ருஷ்­ணன் ஒரு மணி நேரத்­துக்­கும் மேலாக தனியே ஆலோ­சனை நடத்­தி­னார்.

1989 இன் படி­முறை

ஓபி­எஸ்­ஸுக்கு ஆத­ர­வா­கவே பாஜக இன்­ற­ள­வும் இருக்­கி­றது. அந்த தைரி­யத்­தில்­தான் சட்­டப் பேர­வைக்கு தேர்­தல் வந்­தால் சந்­திக்­க­லாம் என அவர் கரு­து­கி­றார். 1989-ல் அதி­முக இரு அணி­க­ளாக தேர்­தலை சந்­தித்­தது. அந்­தத் தேர்­த­லில் ஜெ. அணிக்கு மக்­கள் செல்­வாக்கு இருப்­ப­தாக நிரூ­ பிக்­கப்­பட்­ட­தால் ஜெய­ல­லிதா தலை­மை­யில் அதி­முக மீண்­டும் ஒன்­றி­ணைந்­தது.

தவற விடாதீர்கள்:  முன்­னு­தா­ர­ண­மா­க செயற்­பட வேண்­டும் வடக்கு முத­ல­மைச்­சர்

அது­போல, அடுத்­து­வ­ரும் தேர்­தலை அதி­மு­க­வின் இரு அணி­க­ளும் தனித்­த­னி­யா­கவே சந்­திப்­போம். மக்­கள் யார் பக்­கம் இருக்­கி­றார்­கள் என்­பதை தேர்­தல் முடி­வு­கள் சொல்­லி­வி­டும். அப்­போது, தனது தலை­மை­யில் அதி­முக தானா­கவே ஒன்றி ணைந்­து­வி­டும். சசி­கலா கோஷ்டி யும் ஒதுங்­கி­வி­டும். இந்­தத் திட்­டத் துடன்­தான் ஓபி­எஸ் இப்­போது காய்­ந­கர்த்­து­கி­றார். இவ்­வாறு ஓ.பி.எஸ்-­ஸுக்கு நெருக்­க­மான வட்­டா­ரத்­தி­னர் தெரி­வித்­த­னர்.

தின­க­ரனை சந்­தித்­தது ஏன்?

தமி­ழக அர­சின் புதுடில்லி சிறப்­புப் பிர­தி­நி­தி­யான தள­வாய் சுந்­த­ரத்­தின் முயற்­சி­யில்­தான் தங்க தமிழ்­செல்­வன், வெற்­றி­வேல் உள்­ளிட்­ட­வர்­கள் கடந்த 5-ம் தேதி திஹார் சிறை­யில் தின­க­ரனை சந்­தித்­துப் பேசி­ய­தாக சொல்­லப்­ப­டு­கி­றது.

இது­கு­றித்து வெற்­றி­வேல் எம்­எல்­ஏ­வி­டம் கேட்­ட­போது, ‘‘நான், தங்­க­த­மிழ்­செல்­வன், கோவை எம்.பி.நாக­ரா­ஜன் உள்­ளிட்­ட­வர்­கள் தின­க­ரனை திஹார் சிறை­யில் சந்­தித்­துப் பேசி­யது உண்­மை­தான். எங்­கள் கட்­சி­யின் துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் என்ற முறை­யில் மரி­யாதை நிமித்­த­மா­கவே அவரை சந்­தித்து நலம் விசா­ரித்­து­ விட்டு வந்­தோம். வேறு எது­வும் பேச­வில்லை’’ என்­றார்.

You might also like