மகிந்த அணி வெளியேறும்

வழிநடத்தல் குழுவிலிருந்து

தாம் முன்வைத்த திருத்தங்கள் புதிய அரசமைப்புக்கான வரைவில் உள்வாங்கப்படா விட்டால் தற்போது வழங்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையைத் தமது தரப்பு முழுமையாக எதிர்க்கும் என்பதுடன் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவிலிருந்தும் மகிந்த அணி வெளியேறும் என்று தெரிகிறது.
தற்போது வரை புதிய அரசமைப்புப் பணிகளில் மகிந்த அணியினர் இணைந்தே செயற்படுகின்றனர். நிறைவேற்று அதிகார முறைமை, தேர்தல் முறைமை என்பன தொடர்பில் சில முன்மொழிவுகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழு தனது இடைக்கால அறிக்கையைத் தயாரித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி இடைக்கால அறிக்கையின் வரைவு, வழிநடத்தல் குழுவின் சகல உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. இடைக்கால வரைவு மீதான கருத்துக்களை, வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி முன்வைப்பார்கள்.

‘‘தரப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை ஆராய்ந்து வருகின்றோம். ஏற்கனவே இது போன்ற இடைக்கால அறிக்கைகள் தரப்பட்டபோது, அதில் கூறப்பட்டிருந்த பல விடயங்களை நாங்கள் நிராகரித்தோம். அவை தற்போது தரப்பட்டுள்ள அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டிருக்குமானால் இந்த அறிக்கையையும் நிராகரிப்போம். நாம் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உள்வாங்கப்படாவிட்டால், வழி நடத்தல் குழுவிலிருந்து வெளியேற நேரிடும்”’’ என்று பெயர் குறிப்பிட விரும்பாத மகிந்த அணியின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

தவற விடாதீர்கள்:  உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­க­வும்

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை இறுதி செய்வதற்காக, வழிநடத்தல் குழுவின் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதியிலிருந்து 26ஆம் திகதி வரை நான்கு நாள்களில் 5 அமர்வுகளாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like