இலங்கையில் பிறந்த அதிசயக் குழந்தை!

பலப்பிட்டிய வைத்தியசாலையில் ஆறு கிலோ கிராம் எடையுடைய சிசுவொன்று பிறந்துள்ளது. சாதாரணமாக பிறக்கும் குழந்தை ஒன்றின் நிறை 3.5 கிலோகிராம் ஆகும்.

பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் இந்த அதிக எடை கொண்ட சிசு பிறந்தது. பென்தொட்ட ஹபுருகல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான தாய் ஒருவர் இந்த சிசுவை பிரசவித்துள்ளார்.

சிசேரியன் சத்திர சிகிச்சை ஊடாக இந்த சிசு பிரசவிக்கப்பட்டது என்றும் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிசுவின் எடை ஐந்து கிலோ மற்றும் 980 கிராம் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like