புதிய வகை தேசிய அடையாள அட்டை அறிமுகம்

இலங்கையில் புதிய வகை தேசிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்தாவது-

தற்போது பயன்பாட்டிலுள்ள தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை ஒன்றை எதிர்வரும் இரண்டு மாதங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த அடையாள அட்டையில் பல பாதுகாப்பு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புதிய ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது – என்றார்.

 

You might also like