சிவகார்த்தியை இயக்கும் விக்னேஷ் சிவன்?

தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தின் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.
சிவகார்த்திகேயனை இயக்கும் விக்னேஷ் சிவன்?

சூர்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இந்தப்படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

ஏற்கனவே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்து தருவதாக சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டிருந்தார். அதனை விக்னேஷ் சிவன் படத்தின் மூலமாக முடிவு செய்துள்ளார்.

பொன்.ராம் படத்தை முடித்துவிட்டு, விக்னேஷ் சிவன் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

You might also like