நுண்நிதிக் கடனிலிருந்து மீட்க -பிரதேசசபைப் பணத்தில் கடன் -நல்லூர் பிரதேச சபை!!

Get real time updates directly on you device, subscribe now.

நல்லூர்ப் பிர­தேச சபைக்­குட்­பட்ட மக்­களை நுண்­நி­திக் கடன் நிறு­வ­னங்­க­ளில் இருந்து காப்­பாற்­றப் பிர­தேச சபைக்­குச் சொந்­த­மான நிதி­யில் இருந்து கடன் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும்.

இவ்­வாறு நல்­லூர்ப் பிர­தேச சபைச் செய­லர் சுதர்­ஜ­னன் சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­னார்.

யாழ்ப்­பா­ணம், நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் அமர்வு நேற்­று­முன்­தி­னம் சபை மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது. அதில் உறுப்­பி­னர் மது­ சுதன் இது தொடர்­பா­கப் பிரே­ ரணை கொண்டு வந்­தார். நுண்­நிதி நிறு­வ­னங்­கள் சபைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் கடன் வழங்­கு­வ­தாக இருந்­தால் சபை­யின் அனு­மதி பெற வேண்­டும்.

கடனை வசூ­லிப்­ப­தாக இருந்­தால் மாலை 5 மணிக்கு முன்­னர் வசூ­லிக்க வேண்­டும். அதன் பின்­னர் வீடு­க­ளுக் ­குச் செல்­லக் கூடாது என்ற பிரே­ர­ணையை அவர் முன்­மொ­ழிந்­தார்.

அதன்­போதே பிர­தேச சபைச் செய­லர் மேற்­கண்­ட­வாறு ஆலோ­சனை வழங்­கி­னார்.

நுண்­நிதி நிறு­வ­னங்­கள் கடன் வழங்­கக் கூடாது என்று கட்­ட­ளை­யி­டும் அள­வுக்கு எமக்கு அதி­கா­ரம் உள்­ளதா தெரி­ய­வில்லை. பெரும்­பா­லும் அந்த அதி­கா­ரம் இல்லை என்றே எண்­ணு ­கின்­றேன்.

பொது­மக்­களை நாம் அந்த நிறு­வ­னங்­க­ளில் இருந்து காப்­பாற்ற வேண்­டு­மா­னால் சபை நிதி­யில் இருந்து இல­குக் கடன் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யும். அதற்கு உள்­ளூ­ராட்சி அமைச்­சர் என்ற வகை­யில் வடக்கு முத­ல­மைச்­ச­ரி­டம் அனு­மதி பெற வேண்­டும். அனு­மதி பெற்­றால் நாம் அதை நடை­மு­றைப்­ப­டுத்­த­லாம் -– என்றார்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of