வயதானவர்களின் ஊன்று கோலுக்கு பதிலாக காலணிகள்

வயதானவர்களுக்கு நடப்பதில் சிரமம் ஏற்படுவது தான் அவர்களின் வயோதிபத்தின் முதல் பிரச்சினை. எனவே வயதானவர்கள் நடக்கும் பொழுது கீழே தடுமாறி விழுந்திடாமல் இருப்பதற்காக ஊன்று கோல் எனப்படும் தடியை பயன்படுத்துவார்கள். தற்பொழுது ஊன்றுகோலுக்கு விடைகொடுக்கும் வகையில் காலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வயதானவர்கள் தமது வயதின் தோற்றத்தை உணராமல் இருப்பதற்கு ஊன்று கோலுக்கு விடைவு கொடுக்க வேண்டும். ஆகவே ஊன்று கோலிற்கு பதிலாக குறித்த காலணிகளை பயன்படுத்துவதன் ஊடாக வயதானவர்கள் தடுமாறமல் நடக்கவும் முடியும். வயதாகிவிட்டதே என்ற உணர்வில் இருந்து கொஞ்சம் விடுபடவும் முடியும்.

குறித்த காலணிகளின் அடிப்பகுதியில் பற்சக்கரங்கள் போன்ற அமைப்பு உள்ளதோடு. தடுமாறும் நெரத்தில் தானாகவே உடல் சமநிலையை இந்த காலணி ஏற்படுத்தி தரும்.

You might also like