உழவியந்திரங்கள் மற்றும் பவுஸர்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக உழவியந்திரங்கள் மற்றும் பவுஸர்கள் இன்று மாவட்டச் செயலர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவினால் வழங்கப்பட்டன.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு என்பன இணைந்து இவற்றை வழங்கி வைத்தன.

இந்த நிகழ்வில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ், மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நிரஞ்ஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You might also like