சமுர்த்தி அனுகூலங்கள் நீக்கப்படாது – அரச தலைவர் உறுதி

சமுர்த்தி அனுகூலங்களை குறைப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ அரசு நடவடிக்கை எடுக்காது என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் எம்பிலிப்பிட்டிய கம்உதாவ விளையாட்டரங்கில் நடைபெற்ற வளவை வலய விவசாய மக்களுக்கு 5 ஆயிரம் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

சமுர்த்தி நன்மைகளை பெறத் தகுதியுடைய ஆனால் அது வழங்கப்படாத பெருந்தொகையானோர் நாட்டில் உள்ளனர். அவர்களுக்கு புதிதாக அந்த வரப்பிரசாதங்களை வழங்குவதைத் தவிர்த்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்கனவே நன்மைகளை பெறுபவர்களின் சமுர்த்தி கொடுப்பனவுகள் நீக்கப்படமாட்டாது என்று அரச தலைவர் கூறியுள்ளார்.

தவற விடாதீர்கள்:  சிங்கள அறிவு இல்லாமையே தமிழ் மக்களின் அழிவுக்கு காரணம்

You might also like