விஜ­ய­தாஸவை தூக்குவதில் ஐ.தே.கவினர் விடாப்பிடி

நீதி அமைச்­சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்­சவை அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் ஐக்­கிய தேசி­யக் கட்சி கோரிக்கை விடுப்­ப­தற்கு தயா­ராகி வரு­கின்­றது என்று அந்­தக் கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது.

இது தொடர்­பில் ஆராய்­வ­தற்­காகக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டம் அடுத்­த­வா­ரம் கொழும்­பில் கூட­வுள்­ளது. இதன்­போது விஜ­ய­தாஸ ராஜ­பக்­ச­வி­ட­மி­ருந்து அமைச்­சுப் பத­வி­யைப் பறிக்­கும் யோசனை முன்­வைக்­கப் பட்டு நிறை­வேற்­றப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அந்­தத் தீர்­மா­னம் அரச தலை­வ­ரி­டம் கைய­ளிக்­கப்­ப­டும்.
ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் உறுப்­பி­ன­ரான நீதி அமைச்­சர் விஜ­ய­தாச ராஜ­பக்ச அர­சின் கொள்­கை­க­ளைக் கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்­றார்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீன நிறு­வ­னத்­துக்கு குத்­த­கைக்கு வழங்­கிய அர­சின் திட்­டத்­துக்கு எதி­ராக அவர் போர்க்­கொடி தூக்­கி­னார்.
மகிந்த அரசு மீதான குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பான விசா­ர­ணை­கள் மந்த கதி­யில் இடம்­பெற்று வரு­கின்­றன.

இதற்கு நீதி அமைச்­சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்­சவே கார­ணம் என்ற குற்­றச்­சாட்­டும் இருக்­கின்­றது. அமைச்­ச­ர­வை­யின் கூட்­டுப்­பொ­றுப்­பை­யும் அவர் மீறிச் செயற்­பட்டு வரு­கின்­றார் என்று ஐக்­கிய தேசி­யக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்­சி­யின் தலை­ வ­ரும் தலைமை அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் தொடர்ச்­சி­யாக சுட்­டிக்­காட்டி வரு­கின்­ற­னர்.

நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை ஊடாக நீதி அமைச்­சர் விஜ­ய­தா­ச­வைப் பதவி நீக்­கம் செய்­வ­தற்கு ஐக்­கிய தேசி­யக் கட்சி தீர்­மா­னித்­தி­ருந்­தா­லும் – சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் அவ­ருக்கு சார்­பாக இருப்­ப­தா­லும், மேலும் சில நடை­மு­றைக் கார­ணி­க­ளைக் கருத்­திற்கொண்­டுமே அரச தலை­வ­ரி­டம் கோரிக்கை விடுக்­கும் முடிவை ஐக்­கிய தேசி­யக் கட்சி எடுக்­க­வுள்­ளது.

You might also like