புதிய அரசமைப்பு  உருவாக்கத்தை முத்தரப்புகள் குழப்புகின்றன

‘‘தமிழ் மக்­க­ளின் பிரச் சி­னை­க­ளுக்கு தீர்வை முன்­வைப்­ப­தில் கூட்டு அர­சும் தாம­திக் கின்­றது. தாம­தம் தமிழ் மக்­க­ளுக்குப் பாத­க­மா கவே அமை­யும். புதிய அர­ச­மைப்பு உரு­வாக் கத்தை முப்­பெ­ரும் தரப் பு­க­ளான சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி, ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் மகிந்த அணி ஆகி­ய­கு­ழப்­பு­கின்­றன. இந்த நட­வ­டிக்­கை­களை பன்­னாட்­டுச் சமூ­கம் அனு­ம­திக்­கக்­கூ­டாது’’

இவ்­வாறு நோர்­வேத் தூது­வ­ரி­டம் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் எடுத்­து­ரைத்­தார்.
இலங்­கைக்­கான நோர்வே தூது­வர் தோர்­ப­ஜோர்ன் கௌச்­டாஸ்­டெரை எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் நேற்று சந்­தித்­தார். இந்­தச் சந்­திப்பு நாடா­ளு­மன்­றத்­தி­லுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் அலு­வ­ல­கத்­தில் இடம்­பெற்­றது.

‘‘கூட்டு அர­சின் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளும் தாம­தம் அடை­கின்­றன. தமிழ் மக்­க­ளின் அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­க­ளுக்­கான, அர­சி­யல் தீர்வு உள்­ளிட்­ட­வை­யும் தாம­த­மா­கின்­றது. இது தமி­ழ­ருக்­குப் பாத­கம் அமை­யும். பன்­னாட்டு சமூ­கம் இதற்கு அனு­ம­திக்­கக் கூடாது.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்தை பெரும்­பான்­மை­யான முப்­பெ­ரும் தரப்­பும், (சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, ஐக்­கிய தேசி­யக் கட்சி, மகிந்த அணி) குழப்­பு­கின்­றன. சம உரி­மை­யு­ட­னான தீர்­வையே நாம் கேட்­கின்­றோம்’’ என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் நோர்­வேத் தூது­வ­ரி­டம் எடுத்­துக் கூறி­னார்.

You might also like