இந்து இளைஞர் மகுடம் சூடியது

கைதடி தெற்கு சன­ச­மூக நிலை­யம் தனது 62ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு வட­மா­காண அணி­க­ளுக்கு இடை­யில் இரண்டு பிரி­வாக நடத்­திய கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ‘பி’ பிரி­வில் ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் அணி கிண்­ணம் வென்­றது.

கைதடி தெற்கு சன­ச­மூக நிலை­யத்­தின் கரப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் அணியை எதிர்த்து சண்­டி­லிப்­பாய் இந்து இளை­ஞர் அணி மோதி­யது.

ஐந்து செற்­க­ளைக் கொண்­ட­தாக இறு­தி­யாட்­டம் அமைந்­தது. முதல் மூன்று செற்­க­ளை­யும் முறையே 25:18, 25:20, 25:23 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றிய இந்து இளை­ஞர் அணி 3:0 என்ற செற் கணக்­கில் கிண்­ணம் வென்­றது.

You might also like