Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

ரவியின் பதவி துறப்பு பெருமைக்குரியதன்று

இலங்­கைக்கு இது அமைச்­சர்­கள் பதவி வில­கும் காலம் போலும். வடக்கு மாகாண சபை­யில் மூன்று அமைச்­சர்­கள் பதவி வில­கி­னார்­கள். மற்­றை­ய­வரை விலக்­கு­கி­றேன் பிடி என்று நிற்­கி­றார் முத­ல­மைச்­சர். இப்­போது கொழும்பு அர­சின் அய­லு­ற­வுத்­துறை அமைச்­ச­ரும் முன்­ளாள் நிதி அமைச்­ச­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்­க­வும் தனது பத­வியை துறந்­தி­ருக்­கி­றார்.

மத்­திய வங்­கி­யின் பிணை முறி விவ­கா­ரத்­தில் தனது பத­வியை இழந்­தி­ருக்­கும் முத­லா­வது நபர் ரவி. அவர் நிதி அமைச்­ச­ராக இருந்த காலத்­தில் நடந்த பிணை முறி விற் பனை­யில் தொடர்­பு­பட்­டது என்று கூறப்­ப­டும் அலோ­சி­யஸ் மகேந்­தி­ர­னின் நிறு­வ­னத்­தி­டம் இருந்து தான் தங்­கி­யி­ருந்த அதி­சொ­குசு வீட்­டுக்­கான பணத்­தைப் பெற்­றுக்­கொண்­டார் என்­பதை மறைக்க முடி­யா­மல் போனமை கார­ண­மா­கவே ரவி பதவி வில­க­வேண்டி வந்­தி­ருக்­கி­றது.

அர­சி­யல்­வாதி ஒரு­வ­ருக்கு அந்த வீட்­டைக் கொடுக்க உரிமை ­யாளர்­கள் மறுத்­த­தன் கார­ணத்­தால் வங்­கி­யில் தான் கடன் எடுத்த பணத்தை அலோ­சி­ய­ஸின் நிறு­வ­னம் ஊடாக அந்த வீட்­டுக்­குச் செலுத்­தி­னார் என்­றும் இந்த விவ­கா­ரத்­து­டன் தனது மனை­வி­யும் மக­ளும்­தான் தொடர்­பு­பட்­டி­ருந்­தார்­கள் என்­ப­தால் தனக்கு அது பற்­றித் தெரி­யாது என்­றும் ரவி கருணா­ நாயக்க தனது தரப்பு நியா­யத்­தைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

அவ­ரது நியா­யத்தை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு யாரும் இல்­லாத கார­ணத்­தால் அவர் பதவி வில­க­வேண்­டும் என்ற அழுத்­தம் கடு­மை­யாக இருந்­தது. பொது அமைப்­பு­க­ளும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளும் அவர் பதவி வில­கு­வது கட்­டா­யம் என்று வலி­யு­றுத்­தின.

ஊழல், மோச­டி­யில் ஊறித் திழைத்­தி­ருந்த முன்­னைய ஆட்­சியை அகற்றி நல்­லாட்­சி­யைத் தரு­வோம் என்ற முழக்­கத் து­டன் பத­விக்கு வந்த இன்­றைய மைத்­திரி – ரணில் கூட்டு அர­சின் அமைச்­சர் ஒரு­வர் மீது இப்­ப­டிப்­பட்ட ஊழல் குற்­றச்­ சாட்டு எழுந்­தி­ருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­பதே அந்த அமைப்­பு­கள் முன்­வைத்த நியா­ய­மாக இருந்­தது.

ரவி கரு­ணா­நா­யக்க குற்­ற­வா­ளியோ இல்­லையோ தன் மீது குற்­றச்­சாட்டு ஒன்று ஏற்­ப­டும் அள­விற்­குக்­கூட அவர் நடந்­து­ கொண்­டி­ருக்­கக்­கூ­டாது என்­ப­தையே பொது அமைப்­பு­கள் தீவி­ர­மாக வலி­யு­றுத்தி நின்­றன. அவர் பத­வி­யில் நீடித்­தால் அது இந்த அரசு கூறி­வ­ரும் அதன் நல்­லாட்­சிப் பண்­புக்­குத் தீங்கு என்று அவர்­கள் கரு­தி­யதே அதற்­குக் கார­ணம்.

ஆனால், இந்த விட­யத்­தில் தனக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் அனைத்­தும் திட்­ட­மி­டப்­பட்ட சதி என்று ரவி கூறு­கின்­றார். மகிந்­த­விற்­கும் அவ­ரது சகாக்­க­ளிக்­கும் எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் கடந்த இரு வரு­டங்­க­ளில் நட­ வடிக்கை எடுக்­காத சட்ட மா அதி­பர் திணைக்­க­ளம் தன்­னு­டைய விட­யத்­தில் மட்­டும் விரைந்து செயற்­பட்­டது என்று குற்­றஞ்­சாட்­டு­கி­றார். அப்­படி அந்­தத் திணைக்­க­ளம் செயற்­பட்­ட­தற்­குப் பின்­ன­ணி­யில் தனக்­கும் ஐக்­கிய தேசி­யக் கட்சி அர­சுக்­கும் எதி­ரான சதி இருக்­கி­றது என்­பதே அவ­ரது வாதம்.

எப்­ப­டி­யி­ருந்­தா­லும் அவ­ரது பத­வி­யைக் காப்­பாற்ற முடி­ய­வில்லை. அவர் பதவி வில­கி­யி­ருப்­பது ஒரு முன்­மா­திரி நட­வ­டிக்கை என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­ ­கவும் எதிர்க் கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் ஒரே குர­லில் பாராட்­டி­யி­ருக்­கி­றார்­கள்.

முன்­னைய அர­சின் காலங்­க­ளில் அமைச்­சர்­கள், பிரதி அமைச்­சர்­கள் மீது இத்­த­கைய குற்­றங்­கள் சுமத்­தப்­பட்­ட­போது அவர்­கள் பதவி வில­கி­யி­ருக்க­ வில்லை என்­றும் சாடி­யி­ருக்­கி­றார்­கள்.

கடந்த ஆட்­சி­யில் அப்­படி நடக்­க­வில்லை என்­பது உண்மை­ தான். அத­னால்­தான் பெரும்­பான்­மை­யான மக்­கள் முன்­வந்து அந்த ஆட்­சியை அகற்­றி­னார்­கள். நல்­லாட்சி வேண்­டும் என்றே இந்த அர­சைப் பத­வி­யி­லும் அமர்த்­தி­னார்­கள்.

மக்­க­ளின் எதிர்­பார்ப்­பு­க­ளைச் சிதைக்­கும் வகை­யில் ஊழல் குற்­றச்­சாட்­டுக்­க­ளில் சிக்­கிக்­கொண்­டு­விட்டு, பதவி வில­கல் ஒரு முன்­மா­திரி என்று பெரு­மைப்­பட்­டுக்­கொள்­வ­தற்கு எது­வும் இல்லை. இனி­வ­ரும் காலங்­க­ளி­லா­வது ஊழல் அற்ற ஆட்­சியை வழங்க அரசு திட­சங்­கற்­பம் பூண­வேண்­டும்.