திருவள்ளுவர் வி.கழகத்தின் கால்பந்தாட்ட முடிவுகள்

சர­வணை திரு­வள்­ளு­வர் சன­ச­மூக நிலை­யத்­தின் பொன் விழா­வை­யும், திரு­வள்­ளு­வர் விளை­யாட்­டுக் கழ­கத்­தின் 37ஆவது ஆண்டு நிறை­வை­யும் முன்­னிட்டு தீவக ரீதி­யாக நடத்­தப்­ப­டும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் சின்­ன­மடு ஆலய மைதா­னத்­தில் நடை­பெற்று வரு­கின்­றன. இந்­தத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டங்­க­ளின் முடி­வு­கள் சில.

நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற முத­லா­வது ஆட்­டத்­தில் வேலணை ஐய­னார் விளை­யாட்­டுக் கழக அணி­யும், அல்­லைப்­பிட்டி சென். பிலிப் விளை­யாட்­டுக் கழக அணி­யும் மோதின. இந்த ஆட்­டத்­தில் இரண்டு அணி­யி­ன­ரும் நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­கள் நிறை­வில் எது­வித கோல்­க­ளை­யும் பதி­வு­செய்­யா­ததை அடுத்து சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 4:2 என்ற கோல் கணக்­கில் ஐய­னார் அணி வெற்­றி­பெற்­றது.

தொடர்ந்து இடம்­பெற்ற ஆட்­டத்­தில் நயி­னா­தீவு அண்ணா அணி­யும், புங்­கு­டு­தீவு ஈஸ்­ரன் விளை­யாட்­டுக்கழக அணி­யும் மோதின. இந்த ஆட்­டத்­தில் நயி­னா­தீவு அண்ணா விளை­யாட்­டுக்
கழக அணி 2:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

பிறி­தொரு ஆட்­டத்­தில் புங்­கு­டு­தீவு நண்­பர்­கள் விளை­யாட்­டுக் கழக அணி­யும், மெலிஞ்சி­முனை இரு­த­ய­ராஜா விளை­யாட்­டுக் கழக அணி­யும் மோதின. நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­யி­ன­ரும்
தலா ஓர் கோலைப் பெற்­ற­மை­யால் சம­நி­லைத் தவிர்ப்பு உதை­யின் மூலம் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 4:3 என்ற கோல் கணக்­கில் நண்­பர்­கள் அணி வெற்­றி­பெற்­றது.

You might also like