நாளைய உலகம் இளையோர் கைகளில்

நாளைய உல­கம் உங்­கள் கைக­ளில்; நீங்­களே எதிர்­கால நட்­சத்­தி­ரங்­கள். இந்த நாட்­டின் எதிர்­காலத் தலை­வர்­கள் இளை­ஞர்­களே. நாட்­டின் வளர்ச்­சிக்கு அடித்­த­ள­மி­டக் கூடிய சக்­தி ப­டைத்த இளை­ஞர்­க­ளின் ஆற்­றல்­கள், திற­மை­கள் அளப்­ப­ரி­யவை; ஆண்­க­ளும். பெண்­க­ளும் இன்று சகல துறை­க­ளி­லும் சரி­நி­கர் சமா­ன­மா­கச் சாத­னை­கள் படைத்து வரு­கின்­ற­னர்.

ஒரு நாட்­டின் எதிர்­கா­லமே இளை­ஞர்­கள் கைக­ளில் தான் உள்­ளது. இளை­ஞர்­க­ளின் வளர்ச்­சிக்கு ஏற்பவே நாட்­டின் வளர்ச்­சி­யும் அமை­கி­றது. இத்­த­கைய வலிமை படைத்த இளை­ஞர்­களை ஒவ்­வொரு அர­சு­க­ளும் ஆக்­க­பூர்­வ­மான பணி­க­ளில் ஈடு­ப­டுத்த வலி­யு­றுத்­தும் வித­மாக ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி பன்­னாட்டு இளை­ஞர்­கள் தின­மாக ஐக்­கிய நாடு­கள் சபை­யி­னால் அறிவிக் கப்பட்டு 1999 ஆம் ஆண்டு முதல் இளை­ஞர்­கள் தினம் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

15 வயது தொடக்­கம் 24 வய­துக்­குட்­பட்­ட­வர்­களை இளை­ஞர்­கள் என ஐக்­கி­ய­நா­டு­கள் சபை வரை­ய­றுத்­துள்­ளது. உலக மொத்த சனத்­தொ­கை­யில் ஆறில் ஒரு பங்­கி­னர் இளை­ஞர்­கள் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வேலை­வாய்ப்­பின்மை
இளை­ஞர்­க­ளுக்கு
பிரச்­சி­னைக்கு உரி­ய­தொன்றே

இளை­ஞர்­கள் மத்­தி­யில் இன்று காணப்­ப­டு­கின்ற மிக முக்­கிய பிரச்­சி­னை­க­ளில் ஒன்­றாக வேலை­யில்­லாப் பிரச்­சி­னையே உலக நாடு­கள் அனைத்­தி­லும் தலை தூக்­கி­யி­ருக்­கின்­றது. தாங்­கள் கற்ற கல்­வித் தகு­திக்­கேற்ற வேலை­வாய்ப்­புக் கிட்­டாமை, இளை­ஞர்­களை விரக்­திக்கு உள்­ளாக்கி வேலை வாய்ப்­புக் கோரிப் போராட்­டம் நடத்­தும் நிலைக்கு இட்­டுச் சென்­றுள்­ளது.

இலங்கை அர­சுக்கு இது­வோர் தலை­வ­லி­யாக இருந்­து­வ­ரு­கின்­றது. வேலை­வாய்ப்­பற்­ற­வர்­கள் என்ற அடை மொழிக்­குள் உள்­ள­டக்­கப்­ப­டும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்­கள் வேலை தேடி அலை­கின்­ற­னர்.
தேசிய ரீதி­யில் சமூ­கத்­துக்­கா­க­வும், வீட்­டுக்­கா­க­வும் உள்ள பங்­க­ளிப்­பா­னது இளை­ஞர்­க­ளுக்கு இன்­றி­ய­மை­யா­தது.

எதை­யும் சாதிக்க வேண்­டும்; சமூ­கத்தை வளர்ச்­சிப் பாதை­யில் இட்­டுச் செல்ல வேண்­டும் என்ற துடிப்­பு­ ணர்வு, அக்­கறை இளை­ஞர்­க­ளி­டம் இருக்­க­வேண்­டும். எத்­த­னையோ இளை­ஞர்­கள் இன்று இத்­த­கைய குறிக்­கோள்­க­ளு­டன் வாழு­கின்­ற­னர். அதே வேளை வேறு பல இளை­ஞர்­கள் குறிக்­கோள் க­ளைத் தூக்­கி­யெ­றிந்து விட்­டுத் தங்­கள் விருப்­பம்­போல் வாழு­கின்­ற­னர்.

முன்­மா­தி­ரி­யாக சமூ­கத்­தில் இளை­ஞர்­கள் விளங்­க­ வேண்­டும் எனில், அவர்­கள் மத்­தி­யில் நல்­லொ­ழுக்­கத்­தி­லும் நடத்­தை­க­ளி­லும் கவ­ன­மி­ருக்க வேண்­டும். பண்­பாடு, கலா­சா­ரம் ஆகி­ய­வற்­றி­லும் இளை­ஞர்­க­ளுக்­கு­ரிய பங்­க­ளிப்பு இன்று மேன்மை நிலை­யில் இல்­லா­தி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­யது.

இன்­றைய இளை­ஞர்­க­ளில் ஒரு தரப்­பி­னர்
வன்­மு­றை­யா­ளர்­களே

இளை­ஞர் தினத்­தைக் கடைப்­பி­டிக்­கு­மாறு ஐ.நா சபை அறிவித்தி ருப்பினும், உல­க­ளா­விய ரீதி­யில் ஆறில் ஒரு­பங்­கி­னர் இளை­ஞர்­கள் எனக் கணக்­கி­டப்­பட்­டி­ருப்­பி­னும், இவர்­க­ளில் ஒரு தரப்­பி­னர் தீவி­ர­ வன் மு­றை­யா­ளர்­க­ளா­க­ வும், போதை­வஸ்­துக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளா­க­வும், புகைத்­தல் வழக்­கத்­தைக் கொண்­ட­வர்­க­ளா­க­வும் இருக்­கின்­ற­னர்.

இன்­றைய பல இளை­ஞர்­கள் தீய­வ­ழி­க­ளி­லும், தப்­பான எண்­ணங்­க­ளோ­டும் தங்­க­ளது கன­வு­லக வாழ்க்­கை­யில் மிதக்­கின்­ற­னர். கொலை, களவு, திருட்­டுப் போன்ற குற்­றங்­க­ளுக்­கும் ஆளா­கி­யி­ருக்­கின்­ற­னர். உல­கின் பல்­வேறு நாடு­க­ளி­லும் இளை­ஞர்­கள் மத்­தி­யில் வன்­மு­றைப்­போக்கு அதி­க­ரித்­துச்­செல்­வதை ஊட­கங்­கள் வாயி­லாக அறிந்து கொள்­ளக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. அதே­வேளை, பல இளை­ஞர்­கள் தங்­க­ளது அறி­வுத்­தி­ற­னைப் பயன்­ப­டுத்தி போட்டி போட்­டுக்­கொண்டு முன்­னே­றிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

புதி­ய­பு­திய கண்­டு­பி­டிப்­புக்­க­ளை­யும் உரு­வாக்­கிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். இலட்­சி­யங்­கள், குறிக்­கோள், சமூ­கச் சிந்­தனை, தொழிற்­து­றைக் கல்­வி­யோடு தங்­க­ளது முயற்­சி­ களை உயர்த்­திக் கொள்­வது என்­ப­தற்­க­மைய விஞ்­ஞா­னம் வளர்ச்சி கண்­டுள்ள இரு­பத்­தி­யோ­ராம் நூற்­றாண்­டில் வெற்­றிக்­கொடி நாட்­டும் செயற்­திட்­டங்­க­ளில் தங்­களை ஈடு­ப­டுத்­திக் கொண்­டுள்­ள­னர்.

இளை­ஞர்­கள் அளப்­ப­ரிய
ஆற்­றல் படைத்­த­வர்­கள்

இளை­ஞர்­க­ளின் ஆற்­றல் அள­வி­ட­மு­டி­யா­தது. இன்­றைய இளை­ஞர்­கள் எதை­யும் புரிந்­து­கொள்­ளும் திற­மை­மிக்­க­வர்­கள். புதி­ய­பு­திய விட­யங்­க­ளைக் கற்­றுக்­கொள்­வ­தி­லும், ஆராய்­வ­தி­லும் மிக்க ஈடு­பாடு கொண்­ட­வர்­கள்.

விஞ்­ஞா­னக் கல்­வி­ய­றி­வில் முன்­னேற்­றம் கொண்ட தங்­க­ளுக்­கான கல்­வித்­து­றை­யைத் தேர்ந்­தெ­டுத்­துக் கொள்­வ­தில் போட்­டி­யா­ளர்­க­ளாக இருக்­கின்­ற­னர். கணினித் தொழில்­நுட்ப யுகத்­தில் இன்­றைய உல­கத்­தின் பார்வை இறுக்­க­ம­டைந்து விட்­ட­தா­லும் கணினித் தொழில் நுட்­பத்­தில் தேர்ச்சி பெற்று விட்­ட­தா­லும், உல­கில் எந்­த­வொரு நாட்­டி­லும் தொழில் செய்­யக்­கூ­டிய திற­மை­ப­டைத்த இளை­ஞர்­கள் உல­கம் முழு­வ­தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் உரு­வாகி வரு­கின்­ற­னர்.

தமக்­கு­ரிய அந்­தஸ்­தும் அங்­கீ­கா­ர­மும் கிடைக்­கப் பெறாத நிலை­யில் இளை­ஞர்­கள், இன்­றைய அர­சி­ய­லோ­டும், சம­யத்­து­ட­னும் நேர் எதிர்­ம­றை­யான கருத்­துக்­க­ளோடு போட்டி போட­மு­னை­கின்­ற­னர். சில நாட்டு அர­சு­கள்­கூட இளை­ஞர்­களை வன்­செ­யல்­க­ளி­லும் தீவி­ர­வா­தத்­தி­லும் ஈடு­ப­டு­கின்ற நிலைக்­குத் தள்­ளி­வி­டு­கின்­ற­னர்.

உலக நடை­மு­றை­க­ளி­லுள்ள அர­சி­யல் மற்­றும் பொரு­ளா­தா­ரக் கட்­ட­மைப்­புக்­கள், பெரு­ம­ள­வில் இளை­ஞர்­களை தொழில்­க­ளில் உள்­வாங்­கக் கூடி­ய­வாறு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. பொறுத்­துக் கொள்­ளல், தாங்­கிக்­கொள்­ளல், சகிப்­புத்­தன்மை, என்­ப­வற்­றால் பய­னில்லை என்று உண­ரும்­போது, இளை­ஞர்­கள் பயங்­க­ர­வா­தமே தமக்­கான பாதை என்று தேர்ந் தெ­டுக்­கின்­ற­னர்.

அதே­ச­ம­யம் ஒடுக்க முறை­க­ ளுக்கு எதி­ரா­கக் கிளந்­தெ­ழும் இளை­ஞர்­களை ஒடுக்­கு­தல் செயற்­பா­டு­க­ளும் பெரும்­பா­லான நாடு­க­ளில் இடம்­பெற்று வரு­கின்­றன. இலங்­கை­யில் வாழு­கின்ற மூவி­னத்­தைச் சேர்ந்த படித்த இளை­ஞர்­க­ளின் பிரச்­சி­னை­கள் அர­சி­யல் மய­மாக்­கப்­பட்­டுள்­ளன. 1971 ஆம் ஆண்டு சிறி­மாவோ அர­சி­னா­லும், 1989ஆம் ஆண்டு பிரே­ம­தாச அர­சி­னா­லும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்­கள் அர­சி­யல் ரீதி­யில் ஒடுக்­கு­மு­றைக்­குள்­ளா­னார்­கள். ஐம்­பது ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட இளை­ஞர்­கள் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­த­ னர்.

இளை­ஞர் எழுச்­சி­களை
ஒடுக்­கும் அர­சு­கள்

அர­சு­கள் தமது மேலா­திக்க இரா­ணுவ பலத்­தால் இளை­ஞர் எழுச்­சி­களை அழித்­தி­ருந்­தன. 1999 ஆம் ஆண்­டுக்கு முன்­னர் சிங்­கள இளை­ஞர்­கள் இந்த நிலைக்­குள் ளான வர­லா­றுண்டு. 1983 ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் தமிழ் இளை­ஞர்­கள் மீதான உயர்­கல்வி பாதிக்­கப்­பட்டு வீதி­யில் இறங்­கிப் போரா­டிய எழுச்சி, பின்­னர் ஆயு­தப் போராட்­ட­மாக மாறி­ய­து­டன் 30 ஆண்­டு­கள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் இளை­ஞர்­கள் ஒடுக்­கு­மு­றைக்­கும், இனத்­தின் உரி­மைக்­கா­க­வும் போரா­டிய வர­லாற்­றுக்கு மத்­தி­யில், இளை­ஞர் தினம் கடைப் பி­டிக்­கப்­ப­டு­வ­தா­னது பல்­வேறு சிந்­த­னை­க­ளைத் தோற்­று­விக்­கின்­றது.

இன்று எமது இளை­ஞர்­கள் போதை­ வஸ்­துக்கு அடி­மை­யா­தல், கொலை, கொள்ளை, வாள்­வெட்டு, பெரி­யோர்­களை மதி­யாமை, பாலி­யல் வன்­கொ­டுமை, வழிப்­பறி, திருட்­டுக்­கள் என இளை­ஞர்­கள் குழுக்­க­ளாக இயங்கி சமூ­கக் கட்­ட­மைப்­பைச் சீர­ழித்து வரு­கின்­ற­னர். இதற்­கான பல­மான பின்­த­ளம் மறை­மு­க­மாக இன்­று­வரை இயங்கி வரு­கின்­றது.

கல்­வி­யை­யும், வாழ்க்­கை­யை­யும் அழித்­துக் கொண்டு தமது சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளால் எமது இளை­ஞர்­க­ளில் பலர், சிறைச்­சா­லை ­க­ளில் காலம் கழிக்­க­வும் நேர்ந்­துள்­ளது எமது தமிழ்ச் சமூ­கம் வெட்­கித் தலை குனி­கின்ற அவ­ல­நி­லையை சில இளை­ஞர் குழுக்­கள் உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றன.

30 வரு­ட­கா­லத்­தில் சிங்­கள அர­சுக்­க­ளுக்கு எதி­ராக தாய­க­மன்ணை மீட்­ப­தற்­காக பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் இளை­ஞர்­கள் தங்­க­ளது சுக­போ­கங்­களை மறந்து இள­மைக்­கா­லத்தை துறந்து தமி­ழின விடு­த­லைக்­காக உழைத்­த­னர்.

அது­மட்­டு­மன்றி இளை­யோர்­கள் அலைபேசிப் ­பாவனை, தொலைக் காட்­சிப் பாவனை இணை­யத்­த­ளத்­தின் மீதான அதீ­த­பா­வனை, புகைத்­தல், மது­பா­வனை என்­ப­வற்­றுக்கு அடி­மை­யா­கி­யுள்­ள­த­னால், குறிப்­பாக கலா­சா­ரம், பண்­பாட்­டின் குறி­யீ­டான யாழ்ப்­பா­ணத்­தில் இளை­ஞர்­க­ளது செயற்­பா­டு­கள் எல்­லை­மீ­றிப்­போ­யி­ருக்­கின்­றன.

தமி­ழர் அர­சி­ய­லில் இளை­ஞர்­கள் பெரு­ம­ள­வில் இணைந்­தி­ரா­மை­யும், உள்­வாங்­கப்­ப­டா­த­தும் பெரும் கு­றை­பா­டா­கும். சமூக அமைப்­புக்­க­ளி­லும் இளை­ஞர்­க­ளின் பங்­க­ளிப்­புக்­கள், செயற்­பா­டு­கள் குறிப்­பி­டத்­தக்க அள­வுக்கு இல்லை என்றே கூற­வேண்­டும்.

இளை­ஞர் தின­மான இன்­றைய நாளில் எமது தமிழ் இளை­ஞர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்த வேண்­டிய நட­வ­டிக்­கை­க­ளில் நாம் ஈடு­பட உறுதி எடுத்­துக் கொள்­வோம். ஒவ்­வொரு அர­சி­யல் கட்­சி­க­ளி­லும் தங்­க­ளது அர­சி­ய­லுக்­காக இளை­ஞர் அணி என்ற அடைப்­புக் குறி­யு­டன் இளை­ஞர்­க­ளைக் கூடவே வைத்­துக் கொண்­டுள்­ள­னர்.

பரந்­து­பட்ட அள­வில் உள்ள இளை­ஞர்­க­ளின் செயற்­பா­டு­கள் அர­சி­யல், சம­யம், சமூ­கம், பொது­வு­டமை, மொழி என்­ப­வற்­றுள் உள்­ள­டக்­கப்­பட்டு, இன்­றைய தமிழ் அர­சி­யற் கட்­சி­கள் இளை­ஞர்­களை உள்­வாங்­கிக் கொள்­ள­வேண்­டும்.

இளை­ஞர்­க­ளைத் தூர விலத்­தி வைத்­துள்­ளமை தமிழ்க் கட்­சி­க­ளில் உள்ள குறை­பாடு என்­பதை அவர்­கள் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும். அவர்­கள் ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு அவர்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

இன்­றைய இளை­ஞர்­கள் அவர்­க­ளது தீய நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து மீட்­கப்­பட வேண்­டும். பண்­பட்ட, பண்­பா­டுள்ள இளை­ஞர்­க­ளாக அவர்­கள் உரு­வாக்­கப்­பட்டு ஆளுமை மிக்­க­வர்­க­ளாக சமூ­கத்­தில் மிளிர வேண்­டும். இது இன்­றைய காலத்­தின் தேவை.

மு.ஈழத்தமிழ்மணி

You might also like