Mesothelioma Law Firm, Donate Car to Charity California, Donate Car for Tax Credit, Donate Cars in MA, Donate Your Car Sacramento, How to Donate A Car in California, Sell Annuity Payment, Donate Your Car for Kids, Asbestos Lawyers, Structures Annuity Settlement, Car Insurance Quotes Colorado, Annuity Settlements, Nunavut Culture

பாராட்டுக்கள் கலைஞர்களுக்கு ஊக்க மருந்து

யாழ் .குடா நாட்­டில் இந்த நாள்­க­ளில் சைவ ஆல­யங்­க­ளில் வரு­டாந்த உற்­ச­வங்­கள் சிறப்­புற இடம்­பெற்று வரு­கின்­றன. இன்னும் இரு­மா­தங்­கள் வரை சிறிய பெரிய கோயில்­க­ளில் திரு­வி­ழாக்­க­ளும் நிறை­வில் கலை­நி­கழ்­வு­கள், இசைக்­கச்­சே­ரி­கள் என்­பன களை கட்­டும்.

இன்று சமூக நிகழ்­வு­க­ளில் மக்­கள் கூடு­வ­தென்­பது மிக குறைந்து விட்­டது. பாராட்டு விழாக்­கள் அரங்­கேற்­றம் என்­ப­வற்­றில் கூட சொற்ப மாண­வர்­களே கலந்து கொள்­கின்­ற­னர்.

வீட்­டை­விட்டு எல்­லோ­ரும் வெளிச்­செல்­வது திரு­டர்­க­ளுக்கு வாய்ப்­பாக அமைந்­து­வி­டு­கின்­றது என்ற நியா­ய­மான கார­ணத்­துக்கு அப்­பால் தொலைக்­காட்­சித் தொடர் மக்­களை கட்­டிப் போட்­டுள்­ளது. என்­ப­து­தான் உண்மை இத­னால் நல்ல நிகழ்­வு­ க­ளில் கூட மக்­கள் கூடு­வது குறைந்­து­விட்­டது.

எனவே மக்­கள் கூடும் ஆல­யத்­தி­ரு­வி­ழாக்­க­ளைப் பயன் உள்ள செயற்­பா­டு­க­ளாக ஆக்க இரவு நிகழ்ச்­சி­க­ளுக்கு மத்­தி­யில் சிறு நேரத்தை ஒதுக்கி உள்­ளூர்க் கலை­ஞர்­களை கற்­கை­யில் சாதனை­பு­ரிந்த மாண­வர்­களை மற்­றம் இளை­ஞர்­க­ளைக் கூட நல்வழிப்படுத்தும் நோக்கில் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் மக்கள் மத்தியில் சிறப்பிக்க ஆலய நிர்வாகத்தி னரும் விழா உபயகாரர்களும் முன்வர வேண்டும்.

கலைஞர்கள் பணத்தை பரிசை விட நாட்டையும் கௌரவிப்பை யுமே அதிகம் விரும்புகிறார்கள். இளைஞர்கள் வழி தவறிச்செல்வதை தடுக்கவும் தலைமைத்துவப் பண்பை அவர்கள் மத்தி யில் வளர்க்கவும் இத்தகைய முயற்சிகள் உதவக்கூடும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நிர்வாகச் செயற்பாட்டை இதற்கு முன்னுதாரணமாகக் கொள்ளலாமே?

நா.துஷாந்
வரணி

You might also like