‘சாமி 2’ படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பம்!

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள ‘சாமி 2’ அடுத்த மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஹரி இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா நடிப்பில் ஏற்கனவே வெளியான படம் ‘சாமி’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் படத்தில் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

மேலும் இவர்களுடன் பிரபு, டெல்லி கணேஷ், ஜான் விஜய், இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடிக்கின்றனர். முதல் பாகத்தில் நடித்த விவேக்கிற்குப் பதில், இந்தப் பாகத்தில் சூரி நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கின்றது. ஜனவரியில் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் தொடங்கும் படப்பிடிப்பு, டெல்லி, நொய்டா, ஆக்ரா, ஜெய்ப்பூர், நைனிடால், காத்மாண்டு ஆகிய வட இந்தியப் பகுதிகளிலும், திருநெல்வேலி, பழனி, சிவகாசி மற்றும் கேரளா ஆகிய இடங்களிலும் நடைபெற உள்ளது.

தவற விடாதீர்கள்:  கோக்லி -அனுஸ்கா திரு­ம­ண பந்தத்தில் இணைந்தனர்!!

You might also like